Breaking News

பரந்தூர் மக்களை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய் Live வீடியோ பார்க்க Parandur Airport Protest tvk

அட்மின் மீடியா
0

பரந்தூர் மக்களை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய் Live வீடியோ பார்க்க Parandur Airport Protest

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் மத்திய மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது. 

பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கிராமங்களில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. 

இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை சந்திக்க அனுமதி கேட்கபட்டி இருந்தது அதன்படி இன்று சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனை எதிர்த்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை இன்று (ஜனவரி 20-ம் தேதி) சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்து வருகின்றார்

விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.13 கிராம மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாக தகவல் தெரியவந்துள்ளது. 'அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின் மண்டபத்திற்குள் காவல்துறை அனுமதி அளிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

நேரலை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Vmk6EZBhAus

நேரலை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=vh10bVB6tGY

நேரலை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=sRlRReaeH_o

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback