Breaking News

KCBT APP கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றிய முழு விவரங்களுக்கு ஆப், எந்த டைமுக்கு என்ன பஸ், பேருந்து நடைமேடை முழு விவரம்

அட்மின் மீடியா
0

The Kalaignar Centenary Bus Terminus (KCBT) Mobile App was launched 

It offers real-time bus details, platform arrangements, directions to KCBT, and information on amenities. 

The app also features feedback and grievance redressal. Available for free on Google Play and Apple App Store, it aims to streamline travel.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (21.1.2025) KCBT மொபைல் செயலியை தொடங்கி வைத்தார். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, தென்மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, புதிய செயலியை சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது. 

இந்த செயலி மூலம் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் மொபைல் போன் வாயிலாக அறிய புதிய செயலியை, சி.எம்.டி.ஏ., உருவாக்கி உள்ளது.



சிறப்பம்சங்கள் :-

TNSTC மற்றும் SETC பேருந்துகளின் நிறுத்தம் விவரங்கள், 

பேருந்து செல்லும் இடங்கள், நேரம் மற்றும் பயண நேரங்கள் தெரிந்து கொள்ளலாம் அதாவது எந்த ஊர் பேருந்து எத்தனை மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்புகிறது 

மேலும் மாநகர MTC பேருந்து எண்கள், பாதைகள் மற்றும் நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம்

பயணிகள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலியின் மூலம் கருத்துகள் அளிக்கவும் மற்றும் புகார்கள் பதிவு செய்யவும் செயலியின் தரத்தை மேம்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவைக்கு உதவி எண்கள்

சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் (FAQ) பகுதி 

டாக்ஸி புக்கிங், 

ப்ரீபெய்டு ஆட்டோ புக்கிங், 

எந்தப் ஊர் பேருந்து எந்த நடைமேடையில் இருக்கிறது, 

இந்த செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது. 

இந்த தகவல்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலியை டவுன்லோடு செய்வது எப்படி ?

KCBT மொபைல் செயலி Android மற்றும் iOS தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கூகுள் பிளே ஸ்டோரில் சென்று KCBT என்ன சர்ச் செய்தால் முதல் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://play.google.com/store/apps/details?id=com.xts.kcbt&hl=en_IN

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback