Breaking News

Diploma மற்றும் ITI படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்பு - தமிழக அரசு அறிவிப்பு jobs in united arab emirates

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும்.

இந்நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த பலர் உலகம் முழுவதும் உள்ள ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு பணிகள் செய்து வருகின்றார்கள் 

மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.



பணி:-

Marketing Engineer, 

Production Engineer, 

Machine Shop Turner,

Milling machine Operator, 

Steel Structural fabricator, 

Assistant Fabricators, 

Mechanical Helpers, 

Instrument Technicians, 

CNC Laser Cutter 

Machine Programmer cum operator, 

Heavy Duty Bus Driver, 

Fork Lift Driver 

ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் 

கல்வி தகுதி :-

Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி 

பணி அனுபவம்;-

6 வருடங்கள் 

வயது வரம்பு:-

44 வயதிற்க்குள் இருக்கவேண்டும் 

மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். பதிவு செய்ய 

தேவையான ஆவணங்கள்:-

சுய விவர விண்ணப்பபடிவம், பணி அனுபவ சான்றிதழ் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் (Passport) நகல் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை ovemcinm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

கூடுதல் விவரங்களுக்கு:-

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,  044-22502267 whatsapp 9566239685

நேர்காணல்:-

இப்பணிகளுக்கான நேர்காணல் 22.01.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://omcmanpower.tn.gov.in/#currentopenings

குறிப்பு:-

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. 

விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். 

பதிவு மற்றும் பணி விபரங்களின் தகுதியை பொறுத்து முன்னிரிமை வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback