BSNL மொபைல் டவர் பெயரில் போலி இணையதளம் மோசடி..எச்சரிக்கை முழு விவரம்
BSNL மொபைல் டவர் பெயரில் போலி இணையதளம் மோசடி..எச்சரிக்கை முழு விவரம்
பிஎஸ்என்எல் என்ற பெயரில் ஒரு போலி இணையதளம் செயல்பட்டு வருகிறது என்றும், மொபைல் டவர்களை நிறுவுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவதாக BSNL எச்சரிக்கை
bsnltowersite.in என்ற இணையதளம் உள்ளது. இதன் பெயர் மற்றும் முகப்புப் பக்கத்தைப் பார்த்தால் இது BSNL-ன் இணையதளம் என்று தோன்றலாம். ஆனால் அது உண்மை இல்லை. இது போலியான இணையதளம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல் https://bsnltoweroffice.com என்ற இணையதளம் “BSNL டவர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” போன்ற சேவைகளை வழங்குவதாகக் கூறுகிறது. அந்த இணையதளம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமானது அல்ல என்றும் முற்றிலும் போலியானது என்றும் டெலிகாம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்
