சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் முழு விவரம்
அநாகரிகம் , ஆபாசம் சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் முழு விவரம்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் குறித்து கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை பெண் நிரூபரிடம் பொது இடத்தில் அநாகரீகமாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான பயன்படுத்திவரும் வார்த்தைகளை நாம் தொடர்ந்து கட்சி சென்னை தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்னவத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம் முகம்களிக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார்.
சீமான் செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம்,
பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழித்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேச தெரியாத ச்ச்ச்சீமானே....கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
