Breaking News

அமெரிக்காவில் டிக்டாக் தடை உறுதி செய்த நீதிமன்றம் முழுவிவரம்

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது



டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அமெரிக்காவில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

பைட்டான்ஸ் நிறுவனம் சீனாவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இவர்கள் உலகம் முழுக்க மக்களின் டேட்டாவை எடுக்கிறார்கள். இதன் மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துகிறது. தங்களின் பொருட்களை விற்கிறது. அதோடு இல்லாமல் பல ரகசிய தகவல்களை கூட திரட்டுகிறது என்று புகார் உள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ தளவாடகங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது.

சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.இதை எதிர்த்து, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது

மேலும் டிக்டாக் செயலியின் அமெரிக்க கட்டுப்பாடுகளை மட்டும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அதை தடை செய்ய மாட்டோம் என்று அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் இதை டிக்டாக் - பைட் டான்ஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback