Breaking News

பரந்தூர் போராட்டத்தில் கலந்து கொண்டு தவெக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

பரந்தூர் போராட்டத்தில் கலந்து கொண்டு தவெக தலைவர் விஜய் பேசியது என்ன முழு விபரம்


910 நாள்களாகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்க போராட்டத்த பத்தி ராகுல்னு ஒரு சின்ன பையன் பேசுனத கேட்டேன். அது என் மனச ஏதோ செஞ்சிடுச்சி, உடனே உங்க எல்லோரையும் பாக்கணும்னு தோணுச்சு, உங்க எல்லோர் கூடவும் பேசணும்னு தோணுச்சு, உங்க எல்லோர் கூடவும் நான் தொடர்ந்து நிப்பேன்னு சொல்லணும்னு தோணுச்சு. அதற்கான முன்னெடுப்பு தான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன் உங்களோடு நாங்கள் தொடர்ந்து இருப்போம் என்பதை சொல்ல தான் வந்தேன். தொடர்ந்து இருப்பேன்

வீட்டுக்கு பெரியவங்கதான் முக்கியமானவங்க, அது போல் நாட்டுக்கு முக்கியமானவங்க உங்களை போன்ற விவசாயிகள். விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டுவிட்டுதான் என் பயணத்தை தொடங்க முடிவு செய்தேன். அதற்கு இதுதான் சரியான இடம் என எனக்கு தோன்றியது. எனது கள அரசியல் பயணம் உங்கள் ஆசியுடன் இங்கிருந்து தொடங்குகிறது.

மாநில மாநாட்டில் கட்சி கொள்கையை நான் எடுத்து சொன்னேன். அதில் ஒன்று இயற்கை வள பாதுகாப்பு, விவசாய நிலங்கள் பாதுகாப்பு என்ற தீர்மானத்தையும் நான் சொன்னேன். இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுப்பேன் என கூறியிருந்தேன்.

இவற்றை தடுக்க சட்ட ரீதியில் நடத்தவும் தயங்கமாட்டேன் என கூறியிருந்தேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஏர்போர்ட் வரக் கூடாதுனு சொல்லலை. ஆனால் விவசாய நிலங்களை அழித்துவிட்டு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை ஏற்க முடியாது. எல்லா உயிர்களையும் புவி வெப்பமயமாதல் என்பது பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது சமீபத்தில் நடந்த ஒரு அறிவியல் ஆய்வில் சதுப்பு நிலங்களை அழித்ததுதான் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாம். 90 சதவீதம் நீர் நிலையையும் விவசாயத்தையும் அழித்துவிட்டு வளர்ச்சி திட்டத்தை கொண்டு வரும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.

இந்தப் பிரச்னையில உங்க கூட நான் நிற்பேன். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்ல. ஏர்போர்ட் கட்ட வேணாம்னு நான் சொல்லல. ஆனால், இங்க வேணாம்னுதான் சொல்றேன்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசைக் கேட்கிறேன்.விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் விமான நிலையத்திற்கும் எடுத்திருக்க வேண்டும்

அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் வேண்டாம் என முடிவெடுத்த அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை அரிட்டாபட்டி மக்கள் எப்படி நம் மக்களோ, அது போல் பரந்தூர் மக்களும் நம் மக்கள்தான். பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வருவதில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கு என தெரிகிறது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுதான் போராட்டம் நடத்துகிறார்கள்.

உங்க ஊர் கிராம தேவதைகளான கொல்லமேட்டு அம்மன் மேலயும் எல்லை அம்மன் மேலயும் வச்சிருக்க நம்பிக்கைய மட்டும் விட்ராதீங்க

ஆட்சியாளர்களுக்கு ஒரு கேள்வி 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூரில் எடுக்கணும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதா. எனக்கு புரியவில்லையே

இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களின் வசதிக்காக அவர்களோடு நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி.

விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து விமான நிலையத்தை கொண்டுவாருங்கள்.

வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு மக்களை மிக அதிகமாக பாதிக்கும். மக்கள் உங்கள் தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்க வீட்டு பிள்ளையான நானும், தவெகவும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன்.

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் உங்களை சந்திப்பது தான் எனது திட்டம். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதேபோல் சில நாட்கள் முன், துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. 
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம் நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம், நன்றி வணக்கம் நம்பிக்கையுடன் இருங்கள். என்று பேசினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback