ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மாற்றம் முழு விவரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டு ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டு ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஓட்டு உள்ள பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. முதலில் 47 வேட்பாளர்கள் போட்டி என அறிவிக்கப்பட்டு, பிறகு பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
