Breaking News

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு



மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி வல்லாளபட்டி நாயக்கர்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு கடந்த 07.11 2024 அன்று ஒப்புதல் வழங்கியது. 

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில்

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். 

பல்லுயில் பாரம்பரிய தளத்தின் முக்கியவத்துவத்தை பாதுகாக்கும் வகையில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback