பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்தது என்ன முழு விவரம் வீடியோ இணைப்பு
பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.அங்கு, மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதர் தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்று வரும் கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த ஒரு விடியோ வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக தில்லியில் தங்கவைக்கப்பட்டு பின்னர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவையடுத்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குநர், பஞ்சாப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கபடி அணி பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்; நாற்காலிகளால் தாக்கியதில் படுகாயம் பதற வைக்கும் video பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1882810111472861329
Tags: தமிழக செய்திகள்
