மின்சார காரில் பூரி சுடும் இளைஞர் வைரல் வீடியோ
மின்சார காரில் பூரி சுடும் இளைஞர் வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டொயோட்டா மின்சார கார் முன்பாக அமர்ந்த இளைஞர் ஒருவர், அதனுடன் மின்சார அடுப்பை இணைத்து சமையல் செய்வது இடம்பெற்றுள்ளது.
வீட்டில் சமைப்பது போல மின்சார காரில் பூரி சுடுகிறார். இந்த வீடியோ குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் அது ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதனையடுத்து வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டை குறைக்கின்றன. பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.instagram.com/reel/DERdn8hpP1l/?utm_source=ig_embed&ig_rid=36e5cc67-2fd1-469c-adf3-13e58b0afd10
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
