உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து! வைரல் வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து! வைரல் வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து!உணவு சமைத்தபோது சிலிண்டர் வெடித்தால் 25 கூடாரங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தகவல்
தற்போது தீ கட்டுக்குள் வந்ததாகவும், நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் தீயணைப்பு வீரர்கள் தகவல்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி என 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது
இந்நிலையில் இன்று பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகே பக்தர்கள் கூடியிருக்கும் இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்து அங்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், யாருக்கும் காயம் உள்பட பாதிப்பும் ஏற்படவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1880980001539149847
Tags: இந்திய செய்திகள்
