இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் அமலுக்கு வந்தது அடுத்து என்ன நடக்கும் முழு விவரம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் அமலுக்கு வந்தது அடுத்து என்ன நடக்கும் முழு விவரம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு, GMT 09:15 மணிக்கு காசா பகுதி முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
காசா - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம் GMT 09:15 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸால் இன்று விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் பெற்றுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே விடுவிக்கப்பட உள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டது .இஸ்ரேல் சுமார் 95 பாலஸ்தீனிய கைதிகளை முதல் நாளில் விடுவிக்கிறது
ஹமாஸ் உடனான இரண்டாம் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பயனற்றதாக இருந்தால், காஸாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்
