Breaking News

நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

அட்மின் மீடியா
0

நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டான், கீழடி இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும், 'இரும்பின் தொன்மை' எனும் நூலையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் முதன்மை செயலாளர் சந்திரமோகன், தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்

இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் எக்ஸ் தள பதிவை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback