நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வீசிசென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானை அதிர்ச்சி வீடியோ
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வீசிசென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானை அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை ஒன்று அதன் தும்பிக்கையால் தரையிலிருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது தாய் யானையுடன் மற்றொரு யானை மரக்கிளைகளையும் புற்களையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குட்டி யானை புற்களுக்கு இடையே கிடந்த மது பாட்டிலைத் தும்பிக்கையால் எடுத்து வாயில் வைத்துச் குடிக்க முயற்சித்துள்ளது.
இந்த காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது யானைக் குட்டி தொடர்பாக வீடியோ காட்சி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1882002901108977814
Tags: வைரல் வீடியோ
