Breaking News

கருப்பு மையால் எழுதிய காசோலை செல்லாதா உண்மை என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

கருப்பு மையால் எழுதிய காசோலை செல்லாதா உண்மை என்ன முழு விபரம் It is being claimed in social media posts that RBIhas issued new rules prohibiting the use of black ink on cheques.



பரவிய செய்தி:-

ஆர்பிஐ தற்போது காசோலை குறித்து புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதில், ”மோசடிகளை தடுக்கும் வகையில் கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இந்த மாதம் முதல் செல்லாது என்றும், இனிமேல் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகளை மட்டுமே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்” என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

மேலும், கருப்பு மையால் எழுதினால் எழுத்துக்களை எளிதில் அழித்து விட முடியும் என்பதால் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உண்மை என்ன:-

காசோலை தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல் பொய்யானது.

ரிசர்வ் வங்கி அதுபோல் ஒரு உத்தரவை வெளியிடவில்லை

காசோலையில் கையொப்பம் இடும் போது குறிப்பிட்ட நிறத்திலான மையைத்தான் பயன்படுத்த வேண்டும் என எந்த பரிந்துரையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rbi.org.in/commonman/english/scripts/FAQs.aspx?Id=273

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback