வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்
அட்மின் மீடியா
0
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்
திருத்தி அமைக்கப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இம்மசோதாவில் திருத்தம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் வழங்கிய 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்த 14 தீர்மானங்களுக்கும் ஒப்புதல்.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கக் கூடிய வகையில், வக்பு சொத்துகள் அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டுக் குழுவில் திமுகவின் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், சொத்துகளை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களைத் தீர்க்கவும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி