திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உண்ணிக்காய்ச்சல் முழு விபரம்
ஸ்க்ரப் டைபஸ் ( உண்ணி காய்ச்சல் )என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக தகவல்கள் வந்துள்ள
ரிக்கட்ஸியா எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் எனவும், இத்தொற்று தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து 8 பேர் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
