Breaking News

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ளி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை செய்த பெற்றோர் போக்சோவில் கைது

அட்மின் மீடியா
0

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ளி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை செய்த பெற்றோர் போக்சோவில் கைது

சென்னையில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக குழந்தைகள் நல அமைப்பு மூலம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸாருக்கு புகார் வந்தது. 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

புகாரின் பேரில், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒருவர் ஆன்லைன் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. 

இதனடிப்படையில் அவரது செல்போனை போலீசார் சோதனையிட்டபோது, அதில் ஏராளமான சிறார் ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தனது மனைவியின் உதவியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ததும், இதேபோல், அப்பகுதியில் பல சிறுமிகளை வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் அந்த தம்பதியை கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார், ஆபாச வீடியோக்களை இவர்களிடம் பெற்று பயன்படுத்தியவர்கள் யார் என்பதையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback