Breaking News

காசா போர் நிறுத்தம் நாளை முதல் அமலுக்கு வரும் என கத்தார் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

காசா போர் நிறுத்தம் நாளை முதல் அமலுக்கு வரும் என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய நேரப்படி நாளை (ஜனவரி 19) பகல் 12 மணிக்கு அமலுக்கு வரும் என கத்தார் அரசு அறிவித்துள்ளது 

காசாவில் கடந்த 15 மாதங்களாக நடந்துவந்த போரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,000 கடந்துள்ள நிலையில், கத்தார் உதவியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது

இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. நாளை முதல் இஸ்ரேல் காசா போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது. 

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.




போர்:-

2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது

இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.

பேச்சு வார்த்தை:-

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் அமலுக்கு வரும் என தெரிவித்தனர்மேலும் டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். 


போர் நிறுத்த ஒப்பந்தம்:-

முதல் கட்ட போர் நிறுத்தம் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்தத்தின் போது 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

இஸ்ரேலும் தங்களிடம் உள்ள சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் காசா மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கியுள்ளது. 

முதற்கட்டமாக 737 சிறை கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் சிறைகளில் ஆயிரக்கான பாலஸ்தீனியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback