பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் முழு அட்டவணை இதோ
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் முழு அட்டவணை இதோ
ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் - எழும்பூர் சிறப்பு ரயில்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ஜனவரி 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில்
Mandapam
Ramanathapuram
Paramakudi
Manamadurai
Sivaganga
Kallal
Karaikudi
Pudukottai
Tiruchirappalli
Thanjavur
Kumbakonam
Mayiladuthurai
Sirkazhi
Chidambaram
Cuddalore Port Jn
Panruti
Villupuram
Tindivanam
Melmaruvathur
Chengalpattu
Tambaram
Mambalam
Chennai Egmore மண்டபம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சீர்காழி, விழுப்புரம், திண்டிவனம் ,செங்கல்பட்டு வழியாக சென்னை வந்தடையும்
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில்:
தூத்துக்குடி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06168) வருகிற 19-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - சென்னை எக்மோர் சிறப்பு ரயில்:
மதுரையிலிருந்து சென்னைக்கு ஜனவரி 19-ல் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்து சேரும்.
மறு வழித்தடத்தில் மதுரை-சென்னை முன்பதிவில்லா மெமு ரயில் (06062) வருகிற 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்


