கர்நாடகாவில் பட்டப்பகலில் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்று… பணத்தை அள்ளி சென்ற மர்ம நபர்கள் வைரல் வீடியோ
கர்நாடகாவில் பட்டப்பகலில் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்று… பணத்தை அள்ளி சென்ற மர்ம நபர்கள் வைரல் வீடியோ
கர்நாடாக மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்பச் சென்ற ஊழியர்கள் மீது பட்டபகலில் துப்பாக்கிச்சூடு நடத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலால் பரபரப்பு.
துப்பாக்கி சூட்டில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்! இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள், பணப்பெட்டியை உடைத்து, கட்டு கட்டாக பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி
கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், பிதர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள SBI தலைமை அலுவலகம் அருகே காலையில் ஒரு பயங்கரமான தாக்குதல் நடந்துள்ளது. சிவாஜி சௌக்கில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக ஏஜென்சி ஊழியர்கள் பிஎஸ்சி வாகனத்தில் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது பைக்கில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் இருவர் வாகனத்தை மறித்து ஊழியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிரி வெங்கடேஷ் என்ற ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார்.
93 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் செல்வதற்கு முன்பு குற்றவாளிகள் ஊழியர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தியுள்ளனர். ஊழியர்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்பத் தொடங்கிய போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொள்ளையடிப்பதற்காக 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இறந்த ஊழியர் வாகனத்தின் கதவை திறக்க முயன்றபோது ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டதால், அப்பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் பூட்டப்பட்டன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1879853056948629633
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
