Breaking News

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி

அட்மின் மீடியா
0

சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி


சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஏற்கனவே அரசு மினி பேருந்துகள் சென்னையில் பல இடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

குறிப்பாக சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், மணலி ஆகிய பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தனியார் மினி பேருந்து சேவை நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback