புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
திருமயம் தாலுகா கோனபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமம் பகுதியை சேர்ந்த கரீமின் மகன் ஜெகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பல மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து வந்துள்ளார்.
ஜகபர் அலி (17.1.2025) ம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது. அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரி ஜக்பர் அலி மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரி தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் எனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது மனைவி அளித்த புகாரில்
போலீசாரின் புலன்விசாரணையில் மினி லாரியை ஓட்டி வந்தது ராமநாதபுரத்தை சேர்ந்த காசிநாதன் (45) என்பதும், கல் குவாரி உரிமையாளரான திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியை சேர்ந்த ராசு (54), அவரது மகன் தினேஷ் (28), மற்றொரு கல்குவாரி உரிமையாளரான ராமையா ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமையா தலைமறைவாகினார்.
இதற்கிடையில் கைதான 4 பேரையும் திருமயம் கோர்ட்டில் நீதிபதி கோபால கண்ணன் முன்பு போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து கைதான 4 பேரையும் 15 நாள் காவலில் வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிஐயி ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
