Breaking News

மதவாத, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் - செல்வப்பெருந்தகை

அட்மின் மீடியா
0

இண்டியா கூட்டணியில் இணைய விஜய் முன்வரவேண்டும்: செல்வப்பெருந்தகை அழைப்பு


இந்தியா கூட்டணியில் இணைய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.

அதன்பின்னர், அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 

இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்கு வருவதே நல்ல பலனைத் தரும்,” என்றார்.“விஜய் தனது மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகச் செயல்படுவோம் என்று கூறியிருந்தார். எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்,” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback