Breaking News

நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு



கடந்த கடந்த 12-ம் தேதி நடிகர் விஷால் நடித்து வெளியான மதகஜராஜா திரைப்பட புரமோஷன் விழாவுக்கு வருகை தந்திருந்த விஷால் மிகவும் நடுக்கத்துடன் காணப்பட்டார்.அவருக்கு காய்ச்சல் காரணமாக நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் யூடியூபர் சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், யூடியூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார். 

நடிகர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback