பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை ,அமெரிக்க ஆதரவுடன் மீண்டும் போரைத் தொடங்குவோம் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
பிணைக்கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை ,அமெரிக்க ஆதரவுடன் மீண்டும் போரைத் தொடங்குவோம் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் நிலையில், பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விதி மீறல் இருந்தால் அதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது. ஒப்புக்கொண்டபடி தன்வசம் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 737 பாலஸ்தீனியர்கள் விடுதலையாகின்றனர்.
இந்நிலையில், பிணைக் கைதிகளின் பட்டியலை தராவிட்டால் போர் நிறுத்தம் இல்லை என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில்:-
ஒப்புக் கொள்ளப்பட்டபடி விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முன்னேற மாட்டோம். ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் பொறுத்துக் கொள்ளாது. முழுப் பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் தேவைப்பட்டால் மீண்டும் போரைத் தொடங்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்றும்
பிணைக் கைதிகள் அனைவரும் இஸ்ரேலுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வேன் என்றார்.
மெரிக்க ஆதரவுடன் தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம்" என்று திரு நெதன்யாகு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
