Breaking News

முடிவுக்கு வந்தது காஸா போர் நிறுத்தம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மக்கள் மகிழ்ச்சி

அட்மின் மீடியா
0

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 15 மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. 

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

போர்:-

2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது

இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.

பேச்சு வார்த்தை:-

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்

மேலும் டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். 

இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியன், இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், "முன்பை விட இம்முறை மிகவும் சிறப்பாக இருந்தது" என்றும் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பேச்சுவார்த்தை நேர்மையாகவும் பயனுள்ளதாகவும் நடந்து வருகிறது என்றார். ஆனாலும் அதன் விவரங்களைத் கூற மறுத்துவிட்டார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து மேற்கண்ட இரு பிரிவு தலைவர்களும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம்:-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸ் தரப்புக்கு கத்தார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னொருபுறம் இஸ்ரேல் தரப்புக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய இவ்விரு விவாதங்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், அதன் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்கும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

ஏழு நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் கூடுதலாக நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கும், மேலும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கும். 

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முதல் 42 நாட்களுக்கு இஸ்ரேல் படைகள் பிலடெல்பி பாதையில் தொடர்ந்து இருப்பதற்கும், கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் 800 மீட்டர் தூரத்தை ராணுவ நடவடிக்கையற்ற பகுதியாக வைத்திருப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

1,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இவர்களுள் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுமார் 190 நபர்கள் அடங்குவர். 

இதற்கு ஈடாக ஹமாஸ் 34 பணயக்கைதிகளை விடுவிக்கும். ஒப்பந்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்தின் 16வது நாளில் தொடங்கும்.

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. 

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது.இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.

இந்த போர் நிறுத்தம், "காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை:-

STATEMENT FROM PRESIDENT JOE BIDEN JANUARY 15, 2025 

Today, after many months of intensive diplomacy by the United States, along with Egypt and Qatar, Israel and Hamas have reached a ceasefire and hostage deal. This deal will halt the fighting in Gaza, surge much needed-humanitarian assistance to Palestinian civilians, and reunite the hostages with their families after more than 15 months in captivity. I laid out the precise contours of this plan on May 31, 2024, after which it was endorsed unanimously by the UN Security Council. 

It is the result not only of the extreme pressure that Hamas has been under and the changed regional equation after a ceasefire in Lebanon and weakening of Iran but also of dogged and painstaking American diplomacy. My diplomacy never ceased in their efforts to get this done. Even as we welcome this news, we remember all the families whose loved ones were killed in Hamas's October 7th attack, and the many innocent people killed in the war that followed. It is long past time for the fighting to end and the work of building peace and security to begin.

 I am also if thinking of the American families, three of whom have living hostages in Gaza and four awaiting return of remains after what has been the most horrible ordeal imaginable. Under this deal, we are determined to bring all of them home. I will speak more about this soon. For now, I am thrilled that those who have been held hostage are being reunited with their families.

ஜனாதிபதி ஜோ பிடனின் அறிக்கை ஜனவரி 15, 2025 இன்று, அமெரிக்காவின் பல மாத தீவிர இராஜதந்திரத்திற்குப் பிறகு, எகிப்து மற்றும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மிகவும் தேவையான-மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும், மேலும் 15 மாதங்களுக்கும் மேலாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும். 

மே 31, 2024 அன்று இந்த திட்டத்தின் துல்லியமான வரையறைகளை நான் வகுத்தேன், அதன் பிறகு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. லெபனானில் போர் நிறுத்தம் மற்றும் ஈரானைப் பலவீனப்படுத்திய பின்னர் ஹமாஸ் தீவிர அழுத்தம் மற்றும் மாற்றப்பட்ட பிராந்திய சமன்பாட்டின் விளைவு மட்டுமல்ல, அமெரிக்க இராஜதந்திரத்தின் முட்டுக்கட்டை மற்றும் கடினமான முயற்சியின் விளைவும் ஆகும். எனது இராஜதந்திரம் இதை நிறைவேற்றுவதற்கான அவர்களின் முயற்சிகளில் ஒருபோதும் நின்றுவிடவில்லை. இந்தச் செய்தியை நாங்கள் வரவேற்கும் போதும், ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து குடும்பங்களையும், அதைத் தொடர்ந்து நடந்த போரில் கொல்லப்பட்ட ஏராளமான அப்பாவி மக்களையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம்.

சண்டை முடிவுக்கு வந்து அமைதியையும் பாதுகாப்பையும் கட்டியெழுப்பும் பணி தொடங்குவதற்கு நீண்ட காலம் கடந்துவிட்டது. நான் அமெரிக்கக் குடும்பங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன், அவர்களில் மூன்று பேர் காஸாவில் பணயக்கைதிகளாக உள்ளனர், மேலும் நான்கு பேர் கற்பனை செய்யக்கூடிய மிகவும் பயங்கரமான சோதனைக்குப் பிறகு எச்சங்களைத் திரும்பக் காத்திருக்கிறார்கள். 

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதைப் பற்றி விரைவில் பேசுவேன். இப்போதைக்கு, பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைகிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback