Breaking News

கார் ரேஸ் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய நடிகர் அஜித் வைரல் வீடியோ ajith car race accident

அட்மின் மீடியா
0

கார் ரேஸ் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி யிர் தப்பிய நடிகர் அஜித் வைரல் வீடியோ ajith car race accident



நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதியும் பின்பகுதியும் சேதமடைந்த நிலையில், அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றுள்ள அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று (ஜன.,7) கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது, வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பிய அஜித்தை வேறு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1876607924602298805

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback