Breaking News

மாட்டு கோமியம் அமிர்த நீர் 80 வகை நோய்களை குணப்படுத்தும் - தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு

அட்மின் மீடியா
0

மாட்டு கோமியம் அமிர்த நீர் 80 வகை நோய்களை குணப்படுத்தும் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், 

எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்து விட்டது. சந்நியாசி கோமியத்தை குடிக்க சொன்னார். கோமியம் குடித்த உடன் 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டது.

மேலும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சனைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்றும் அவர் கூறினார்.இந்நிலையில், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

கோமியம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி அளித்த விளக்கத்தில்:-

கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதற்கு என்னிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது. நானும் பஞ்சகவ்யம் அருந்துகிறேன். இந்த விவாதத்தை நேர்மறையாகப் பார்க்கிறேன். இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் விரும்பினால், சென்னை ஐஐடியிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

ஆராய்ச்சி பூர்வமாக கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதனால் தான், வீட்டிற்கு முன்பு அதனைத் தெளிப்பார்கள். ஆயுர்வேதத்தில், கோமியத்தை அமிர்த நீர் என குறிப்பிடுகிறார்கள். ஆயுர்வேதத்தில் அதனை மருந்து என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்போ மாட்டு சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.

மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே இதனை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ள முடியாது. இது ஆயுர்வேதத்தில் மருந்து என சொல்லப்பட்டுள்ளது. 80 வகையான நோய்களுக்கு கோமியத்தைப் பயன்படுத்தலாம் என ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள்

விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என்று கூறப்பட்டுள்ள நிலையில் கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என்று பேசுகிறார்கள்.மாட்டின் சிறுநீர் என்பது அமிர்த நீர். மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாட்டு சிறுநீரிலும் கிருமிநாசினி உள்ளதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback