Breaking News

6 முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு பொதுமக்கள் காண ஏற்பாடு முழு விவரம் planetary parade

அட்மின் மீடியா
0

Mars, Uranus ,Jupiter ,Neptune ,Saturn, Venus, ஆகிய 6 முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடக்கவுள்ளது. 

ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் கோள்களை காண பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு!

6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணலாம். யுரேனஸ், நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

சூரிய குடும்பத்தில் பூமியை போலவே மேலும் பல கோள்களும், சிறுக்கோள்களும், விண்மீன்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் பூமியை விட நீளமான அல்லது குறைவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் மிக அரிதாக அவ்வப்போது சில கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்வதுண்டு.

அதன்படி, இந்த ஆண்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் பூமியின் நேர்கோட்டில் ஒன்றாக காணப்படும் வானியல் அதிசயம் நிகழ உள்ளது. இந்த வானியல் நிகழ்வு வரும் 22 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது

Mars, Uranus ,Jupiter ,Neptune ,Saturn, Venus, ஆகிய 6 முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடக்கவுள்ளது. இந்த கிரக அணிவகுப்பை தொலைநோக்கிகள் துணை கொண்டு மேலும் தெளிவாக இதை காணலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பல-கிரகங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் மிகவும் அரிதானவை  வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றை கண்ணால் பார்க்க முடியும் என்றாலும், தொலைநோக்கி மூலம் தெளிவாக பார்க்கலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback