5 மாவட்டங்களில் கனமழை திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை
5 மாவட்டங்களில் கனமழை திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை மையம்.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (19-01-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
