Breaking News

நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

 நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் 19-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback