Breaking News

டெல்லியில் ஒரே கட்டமாக பிப் 5 ம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேராக உள்ளனர். 

அதில் ஆண் வாக்காளர்கள் 83.5 லட்சம் பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 73.7 லட்சம் உள்ளனர்

வேட்பு மனுதாக்கல் வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜனவரி 17ஆம் தேதி கடைசிநாளாகும். 

வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் வேட்புனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதியாகும். 

70 தொகுகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback