காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த 4 இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகள் இரண்டாம் கட்டமாக விடுதலை!
காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த 4 இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகள் இரண்டாம் கட்டமாக விடுதலை!
காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர்.
கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றியவர்கள்
இஸ்ரேல் வந்துள்ள இவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர்.இஸ்ரேல் பெண் வீரர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, பாலஸ்தீன கைதிகள் சுமார் 200 பேரை இஸ்ரேல் நேற்று விடுவித்தது. காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் 98 பேரில் இதுவரை 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளும் அடுத்தடுத்து மீட்கப்படுவுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
