Breaking News

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் - 4 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணம் - 4 பேர் கைது முழு விவரம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் திருமயம் அருகே லாரி மோதி சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உயிரிழந்த வழக்கில் திருப்பம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

திருமயம் தாலுகா கோனபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமம் பகுதியை சேர்ந்த கரீமின் மகன் ஜெகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். 

திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பல மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து வந்துள்ளார். 

ஜகபர் அலி நேற்று முன்தினம் (17.1.2025)  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது. அந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரி ஜக்பர் அலி மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரி தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் எனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது மனைவி அளித்த புகாரில் ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், மேலும் விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback