Breaking News

ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு முழு விவரம்



ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு; திருப்பதியிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 22பேர் காயம்

திருச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றை புக் செய்து புறப்பட்டு சென்றனர். திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 17) அதிகாலை ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து லாரி மீது மோதியது 

இதில் தனியார் பேருந்திலிருந்த 4 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த நபர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback