Breaking News

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்! முழு விவரம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதால் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

சீமானின் பெரியார் குறித்த இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் நாதக வேட்பாளர்களும் விலகினர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback