Breaking News

தொண்டையில் சிக்கிய கேரட் 2 வயது குழந்தை உயிரிழப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் கேரட் சாப்பிட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொருக்குப்பேட்டையில் உள்ள பாட்டி இல்லத்தில் திடீரென மயங்கி விழுந்த குழந்தை லத்திஷாவை பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதனிடையே, தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -பிரமிளா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் லித்திஷா என்ற மகள் உள்ளார். 

இந்நிலையில் இன்று பவிளையாடிக்கொண்டிருந்த லித்திஷாவிடம் சமைக்காத கேரட் துண்டை அவரது பாட்டி சாப்பிட்ட கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது கேரட்டை சாப்பிட்ட லித்திஷாவின் தொண்டையில் சிக்கியது. இதனால் மயங்கி விழுந்தாள்.

உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் சென்றனர். அப்போது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள்,ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

தொண்டையில் கேரட் சிக்கி 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம்இதனைக்கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.கேரட் துண்டு தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback