2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் தான் உள்ளாட்டசி தேர்தலில் போட்டியிட முடியும்... சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் தான் உள்ளாட்ட்சி தேர்தலில் போட்டியிட முடியும்... சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர் தான் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம். அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்களே கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும்.
ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் ” என்றார்.
Tags: இந்திய செய்திகள்
