Breaking News

ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் முழு விவரம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சென்னையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை செய்யலாம்.சிறப்பு முகாம்இந்த குறைதீர் முகாம் சென்னையை தொடர்ந்து அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் நடைபெறும். 

மேலும் இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் நம்பர் மாற்றுதல் போன்ற சேவைகளை செய்து கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 25.01.2025 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி ஜனவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள ணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்ட உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கண களில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். 

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback