குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டம் ஏப்ரல் 22 ம்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு புதிய அபராதம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டம் ஏப்ரல் 22 ம்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு முழு விவரம்
குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டம் குவைத் அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது
புதிய போக்குவரத்து சட்டம் 90 நாட்களுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் புதிய சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் தற்போதுள்ள அபராதம் அடுத்த மூன்று மாதங்களுக்கும் பொருந்தும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு குறைந்தபட்ச அபராதம் 15 குவைத் தினார். தற்போது 5 தினார் மட்டுமே உள்ளது.
மேலும், மது அல்லது போதைப்பொருளின் போதையில் வாகனம் ஓட்டும்போது கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தினால் அதிகபட்ச அபராதம் 5,000 குவைத் தினார் வரை இருக்கலாம். வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான அபராதம் KD 5 இல் இருந்து KD 75 ஆக அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Tags: வெளிநாட்டு செய்திகள்







