விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைத்து இஸ்ரோ சாதனை வைரல் வீடியோ SpaDeX Mission Successful
ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ SpaDeX Mission Successful
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
இன்று காலை ‘ஸ்பேஸ் டாக்கிங்’ மூலம் 500 மீட்டர் தொலைவில் 2 செயற்கைகோள்களை இணைக்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.ஸ்பேஸ் டாக்கிங்400 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
2 செயற்கைகோள்களும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தபட்டுள்ளன. அதன் பிறகு இரண்டையும் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வெற்றிகரமாக இணைத்து சாதனை புரிந்துள்ளது
இந்த செயற்கைக் கோள்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இஸ்ரோ தரப்பில் பகிரப்பட்டுள்ளது.
விண்வெளி டாக்கிங் பரிசோதனை எனப்படும் இந்தத் திட்டம் எதிர்கால ஆழமான விண்வெளி ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்த உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்த சாதனை சாத்தியமாகும் பட்சத்தில் உலகின் நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்கும்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1879811314316710208
Tags: இந்திய செய்திகள்
