Breaking News

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது

கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவிக்கு  அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில் மாணவியின் தாய் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback