Breaking News

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாஜக மாநில பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவர் கைது

அட்மின் மீடியா
0

பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷாவை மதுரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வரும் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், எம்.எஸ்.ஷா தனது மகளின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி ஆபாச உரையாடல்களை அனுப்பியதாகவும், மகளை பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து, வெளியூர், உள்ளூர் விடுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த செயல்களுக்கு தனது மனைவியும் உதவியுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள் ளார்.மேலும், புதிய ஸ்கூட்டர், ஆடைகள் வாங்கித் தருவதாக வாட்ஸ் ஆப் மூலம், மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். கடனை அடைத்து விடுவதாகக் கூறி, தனது மனைவியுடன் நெருக்கமாக இருந்த நிலையில், மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். எனவே, எம்.எஸ்.ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போலீசார், பாஜக நிர்வாகி எம்.எஸ் ஷா மீதும், சிறுமியின் தாயார் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், எம்.எஸ்.ஷாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback