பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு 14 காளைகளை அடக்கி கார் பரிசை வென்ற வீரர் முழு விவரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு 14 காளைகளை அடக்கி கார் பரிசை வென்ற வீரர் முழு விவரம்
14 காளைகளை அடைக்கி முதல் பரிசான காரை வென்றார் நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன்
12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ள துளசிராம் 2-ம் இடம் பிடித்தார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்தார், இவருக்கு எலக்ட்ரிகல் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
சத்திரப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியின் காளை முதல் பரிசைப் பெற்றது. இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
சின்னப்பட்டியை கார்த்திக்கின் காளை 2வது இடம் பெற்றது. இவருக்கு அலங்கை பொன் குமார் என்பவர் வழங்கிய நாட்டின பசுவும், கன்றும் பரிசளிக்கப்பட்டது.
குருவித்துறையைச் சேர்ந்த பவித்ரனின் காளை 3-ம் இடம் பெற்றது. இவருக்கு விவசாய வேளாண் கருவி (ரெட்டேட்டர்) பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் விழாவை முன்னிட்டு பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஜல்லிக்கட்டு விழா மஞ்சமலை ஆற்றில் நடைபெற்றது.
விழாவைக் காண உள்ளூர் மக்கள், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் பாலமேட்டுக்கு குவிந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர். இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags: தமிழக செய்திகள்
