திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு
கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர்
இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்
மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் 13ம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு சாமி தரிசனத்திற்கு வந்த சிறுமியிடம் ஜெயபாண்டியன் பேச்சுக் கொடுத்தார்.அதன் பின்னர் சிறுமி கழிவறைக்குச் சென்ற போது அச்சிறுமியை பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்துப் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள் நல மையத்திற்கும் (CHILD HELPLINE) தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைகள் நல உதவி மையத்தினர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இது தொடர்பாகப் புகார் தெரிவித்தனர்
விசாரணைக்கு பின்பு ஜெயபாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
