மஹாராஷ்டிராவில் 13 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை காப்பாற்றிய இளைஞர் வைரல் வீடியோ
மஹாராஷ்டிராவில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர் வைரல் வீடியோ
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தேவிசபாடா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற பவேஷ் மத்ரே என்கிற நபர் அதனைக் கண்டார். உடனே வேகமாக ஓடிய அவர் குழந்தையை பிடிக்க முயன்றார்.ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. அவருடைய கையில் பட்டு குழந்தை கீழே விழுந்தது. இதனால் அந்த குழந்தைக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இவர்தான் உண்மையான ஹீரோ என்று பாவேஷூக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1883902641383883194
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
