Breaking News

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் 100 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் 100 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை முழு விவரம்



தமிழகத்தில் கடந்த 2011 - 2016 காலகட்டங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், தற்பொழுது ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம், அன்றைய காலத்தில் அமைச்சராக  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்தியலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகப்பிரபு மற்றும் அவரது உறவினர் பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கின் பேரில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback