Breaking News

இலவசமாக தமிழில் பைத்தான் கற்றுகொள்ள ஆன்லைன் வகுப்பு python online free course

அட்மின் மீடியா
0

இலவசமாக தமிழில் பைத்தான் கற்றுகொள்ள ஆன்லைன் வகுப்பு  python online free course


கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்தப்பட உள்ளது.

கால அளவு – 2 மாதம் 

( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்.)

நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) .காலை 9.30 – 10.30 AM 

வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 8 2024

ஆசிரியர் – சையது ஜாஃபர்

வகுப்புக்கான இணைப்பு : meet.jit.si/ParottaSalnaPythonBatch2

இவ்வகுப்புகள் பைத்தான் நிரல் மொழிக்கான அறிமுகம் மட்டுமே . 

இவை எந்த வித certification தேர்வுகளுக்கும் அல்ல.

பைத்தான் Python என்பது கணினியில் பயன்படுத்தக் கூடிய ஒரு இலவச, கட்டற்ற, நிரலாக்க மொழி ஆகும். இதன் மூலம் நமது கணினி தேவைகளுக்கான எல்லா மென்பொருட்களையும் மிக எளிதில் உருவாக்கலாம். 

பைத்தான் மொழி ஆனது மாணவர்களுக்கும், கணினித் துறையில் உள்ளோருக்கும், கணினித் துறையில் நுழைய விரும்புவோருக்கும் பல வழிகளில் பயன்படுகிறது.

தொடர்புக்கு – 

KaniyamFoundation@gmail.com

சீனிவாசன் +919841795460 ( வாட்சப் அழைப்பு மட்டும் )

தனசேகர் +919952521980 

பாடத்திட்டம்

Chapter 1 – Meet & Greet What python can do ?Why Python ?Python syntax compared to other programming language .Python Installation. Meet and Greet.

Chapter 2 – Python Basics Print Comments Python data structure and data types. String operations in python Simple input & output Operators in python

Chapter 3 – Program Flow Indentation The IF statement While Loop For Loop The Range statement Break, Continue & Pass Assert Example of Loop

Chapter 4 – Functions & Modules Create your own functions Functions parameters variable arguments Scope of a function Function documentations Lambda function & map Modules

Chapter 5 – Exceptions Handling Errors Exception Handling with try except Handling Multiple Exceptions Writing your own exceptions

Chapter 6 – File Handling File handling modes Reading files Writing & Appending to files Handling File exceptions The with statements

Chapter 7 – Data Structures List Nested List Dictionary Functions Default ParametersV ariable Arguments Specialized sorts

Chapter 8 – Mini Projects

வாய்ப்பு இருந்தால், கூடுதல் பாடங்கள் சேர்க்கப்படும்.

முழு பாடத்திடம் இங்கே – parottasalna.wordpress.com/python-development/

நிபந்தனைகள்:-

இணைய வசதி இருக்க வேண்டும்

கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும்.

அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும்.

வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத ஒரு மணி நேரம் தினமும் தேவைப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://kaniyam.com/python-course-2024/

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback